Tuesday, July 25, 2006

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

By டிசே தமிழன்
Tuesday, July 25th, 2006 at 12:21 am

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

4Chandravathanaa says:
July 25th, 2006 at 1:25 am


இளங்கோ,

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு
வாசித்தேன்.

அங்கு பின்னூட்டத்திற்கு இடமில்லாததால் இங்கு எழுதுகிறேன்.
நல்ல பதிவு. வாழ்வு சிதறப்பட்ட எம்மவரின் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

உங்கள் எழுத்துக்களில் கூடுதலான சமயங்களில் மரணம் என்ற சொல்லும் அது மலிந்து கிடக்கும் விதமும் கூடவே அதன் வலியும் உணர்த்தப் படுவதைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பாதிப்பின் காரணத்தை உங்களது இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

படத்திலே வருகின்ற இரத்தம் உங்களை எப்படிப் பாதிக்கிறதோ அதே போல குண்டு வெடிப்புக்கள் என்னைப் பாதிக்கின்றன. ஏதோ ஒரு படத்தில் அர்ச்சுனும் கமலும் நடிக்கிறார்கள் என நினைக்கிறேன். படம் தொடங்கும் போதே பஸ் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டோ அல்லது பாலம் உடைந்தோ எரிந்து குழந்தைகள் இறக்கிறார்கள். அந்தக் காட்சி என்னைக் குழறி அழ வைத்து விட்டது. அன்று முழுவதுமே நான் மனமுடைந்து அழுது கொண்டே இருந்தேன். எந்தச் சோகமான படத்தையும் அழாமல் இருந்து பார்ப்பேன். ஆனால் இப்படியான காட்சிகளில் கலங்கி விடுவேன்.

கதைசொல்லியும் Gang fightsம்

By டிசே தமிழன்
Tuesday, June 13th, 2006 at 8:14 am

கதைசொல்லியும் Gang fightsம்


1
Chandravathanaa says:
July 20th, 2006 at 1:10 am


இதை மீண்டும் ஒரு முறையாய் இன்று வாசித்து முடித்தேன்.

இதை முதன்முதலில் கனடாவுக்கு வந்து 6கிழமைகள் நின்று திரும்பிய சில வருடங்களில் வாசித்த போது ஒவ்வொரு சம்பவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்க முடிந்தது. கனடாவில் எமது இளைய சமுதாயத்தின் நடைமுறைகளை நேரிலே கண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. திடீரெனக் கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் பயன் படுத்திய விதமும், திடீரென ஆக்கிரமித்த குடும்ப உறவுகள் இல்லாத தனிமையின் வெறுமையைப் போக்க அவர்கள் கூடிய விதங்களும் மிகவும் வருத்தத்துக்கு உரியவை.

இதை எழுதிய நீங்கள்தான் கதையின் கதாநாயகனாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி. இதை எழுதும் போது உங்கள் எழுத்தில் உங்களைப் புரிந்து கொண்ட தன்மை இருக்கிறது. இயலாமை உங்களை அறியாமலே உங்களை அழுத்தினாலும் அதனால் சில பல ஒவ்வாத செயற்பாடுகள் நடந்தாலும் உங்களிடம் மனிதம் இருந்திருக்கிறது.

அங்கு சுட்டவர்களும் வெட்டியவர்களும் மனிதமற்றவர்கள் என்றில்லை. ஏதோ ஓருவித விரக்தியும் தனிமையும் சேர்ந்து மனநிலை குழம்பியவர்கள் என்றே அவர்களைக் கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஒரு அன்பான உறவைச் சந்தித்து அன்பின் அணைப்பைப் பெறும் போது மாறியிருப்பார்கள். சாதாரண மனிதர்களாகியிருப்பார்கள். தமது தவறுக்கு நியாயம் தேடுபவர்களாய் இருந்தாலும் கூட உள்ளுக்குள்ளே கண்டிப்பாக வருந்தியிருப்பார்கள்.

இன்றைய நீங்கள் கூட அந்த வடுக்களுக்குள் அகப்பட்ட ஒருவனின் சாயலே தெரியாமலே இதுவரை எழுத்தால் எனக்கு அறிமுகமாகி இருந்தீர்கள். இத்தனை எழுத்து வன்மை உள்ள எத்தனை இளைஞர்களை புலம் பெயர்தல் புரட்டிப் போட்டிருக்கிறது என்ற உண்மையை உணர முடியும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை.

Chandravathanaa says:
July 20th, 2006 at 1:10 am


2
Chandravathanaa says:
July 20th, 2006 at 1:36 am

இளங்கோஎனது கருத்து உங்களுக்குப் பொருந்தவில்லை என்று பட்டால் தயங்காமல் அழித்து விடுங்கள்.நான் சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதை முதன்முதலாக வாசித்த போது இது என்னை மிகமிகப் பாதித்தது. எனது கணவரோடு இதைப் பற்றி நீண்ட நேரம் கதைத்தேன். புலம்பெயர் இளைஞர்களுக்காக மிகவும் வருந்தினேன். புலம்பெயர் இளைஞர்கள் மீது யாராவது குற்றம் கூறினால் எனக்கு அவர்கள் மேல் கோபம் வருவதற்கு இக்கதையும் ஒரு காரணம்.

தவறுகளை மட்டுமே பார்க்கும் எமது சமூகம் தவறுக்கான காரணங்களைப் பார்ப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து….
இந்த வரிகளின் உண்மையைப் பலர் உணர்வதில்லை
.


3
டிசே தமிழன் says:
July 20th, 2006 at 8:44 am

சந்திரவதனா, முதலாவது பின்னூட்டத்தை ஏற்கனவே அனுமதித்து விட்டதனால் எந்தப் பின்னூட்டத்தை அனுமதிப்பது/விலத்துவது என்று சற்றுக்குழப்பமாய் இருப்பதால் (இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால்) இரண்டையும் அனுமதித்திருக்கின்றேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

---

டிசே தமிழன் says:
July 20th, 2006 at 10:35 am


சந்திரவதனா,பிரதியொன்று எழுதப்பட்டு பொதுவில் வைக்கப்பட்டுவிட்டால், வாசகர் தனக்குரிய பிரதியாய் வாசிக்கவும் விமர்சிக்கவும் உரிமையிருக்கிறது என்று நம்புவதால் நீங்கள் வைக்கும் கருத்துக்கள் எதையும் அகற்றவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

நிற்க.முதலாவது பின்னூட்டத்தையும் எனக்குத் தனிப்பட்டதாய் சொல்லப்பட்டதாய் நினைக்காது, பிரதியிலுள்ள கதைசொல்லிக்கு கூறப்பட்டதாகவே எடுத்துக்கொள்கின்றேன். எனவே நீங்கள் எழுதியதில் தவறேதும் இருப்பதாய் நினைக்கவில்லை. எழுதப்படும் ஆக்கங்களிலுள்ள விடயங்களில் உண்மையாய் நடந்தது / நடக்கவில்லை என்று அடிக்குறிப்பிடுவது கூட வாசிப்பவரின் வெளிக்குள் அத்துமீறுவதாய் இருக்கும் என்று நினைப்பதால் பல சமயங்களில் இவ்வாறான கேள்விகளைக் கடந்தே போயிருக்கின்றேன். இப்போது கூட அப்படிக் கடந்துபோகலாம் என்றாலும் -மெளனம் சம்மதமாய் போய்விடக்கூடும் என்பதால்- ஒரு சிறு குறிப்பாய் இந்தக்கதையில் எந்த இடத்திலும் நான் இல்லை என்பதைக் கூறிக்கொள்கின்றேன். இந்தக்கதைசொல்லியைப் போல இருந்திருந்தால் கூட அதற்காய் இன்றையபொழுதில் வருந்தியிருப்பேனே தவிர, இதை வெளிப்படையாகச் சொல்ல அவமானப்படவோ வெட்கப்படவோ செய்திருக்கமாட்டேன் என்பது மட்டும் உறுதியாய்த் தெரியும்.

இந்தக்கதையை எழுத ஆரம்பித்தபோது சரி/பிழை, நியாயம்/அநியாயம் என்று எந்த ஒருபக்கமும் சாய்ந்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாயிருந்தேன். அப்படியிருந்தும் வளாக சஞ்சிகையில் இந்தக்கதை வெளிவந்தபோது, குழுக்களின் வன்முறைக்கு ஆதரவான கதை என்றுதான் விமர்சிக்கப்பட்டது (பதிவுகள் இணையத்தளத்திலும் சில நண்பர்கள் ஒரு சார்பாய் இருக்கின்றது என்று விவாதித்ததாய் நினைவுண்டு)

.…..

மற்றும்படி, இத்தகைய விமர்சனங்களையும் விட, விளிம்புநிலை மனிதர்களாய் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த இளைஞர்கள் குறித்து அக்கறைப்பட உங்களைப் போன்ற பலர் சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் எனக்கு முக்கியமாய்ப்படுகிறது. இதை முன்பு வாசித்து, முகங்கள் தெரியாமல் மின்னஞ்சல்களில் தொடர்புகொண்ட சிலரது உணர்வுகளும் உங்களைப் போன்றே இருந்திருக்கின்றன என்பதுவும் இதத்தைத் தந்திருந்தது.


5
Chandravathanaa says:
July 21st, 2006 at 5:07 am

முதலாவது பின்னூட்டத்தை ஏற்கனவே அனுமதித்துவிட்டதனால் எந்தப் பின்னூட்டத்தை அனுமதிப்பது/விலத்துவது என்று சற்றுக்குழப்பமாய் இருப்பதால் (இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால்) இரண்டையும் அனுமதித்திருக்கின்றேன். தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

எனது கருத்துக்களை நீங்கள் கருத்துக்களாகவே ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.அழிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு அது பிடிக்கவில்லையானால் மட்டுமே அழிக்கச் சொன்னேன். ஒன்றை அழித்திருந்தால் மற்றையது பொருந்தாமல் போயிருக்கும். இருப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லாதவரை இரண்டுமே இருப்பது நல்லது.

கதைபற்றிய, உங்கள் கருத்துக்கள் பற்றிய… எனது மேலதிக எண்ணங்களைப் பின்னர் தருகிறேன்.

6
யாத்திரீகன் says:
July 21st, 2006 at 8:15 am


>>>> ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து….


7
டிசே தமிழன் says:
July 21st, 2006 at 2:26 pm

சந்திரவதனா: கதை பற்றிய உஙகள் கருத்து அறிய ஆவல்; எழுதுங்கள்.

யாத்ரீகன்: நீங்கள் கூறவந்தது எதுவோ இடைநடுவில் நின்றுவிட்டது போல :-).

8
மலைநாடான் says:
July 23rd, 2006 at 1:41 pm

புலத்தில் எங்கள் இளைய தலைமுறை குறித்த மிகச் சரியான நோக்குடன் வந்த சொற்பமான பதிவுகளில் இதுவும் அடங்கும் எனக் கருதுகின்றேன்.

//நாங்கள் எதையும் அளவோடு அனுபவிக்கத்தெரியாதவர்களெண்டும், பல்வேறுபட்ட மரபின் இழைகள் எம்மை இறுக்க பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள்//
இது எங்கள் சமுகம் குறித்ததுப் பார்க்கபட்ட ஒரு நுட்பமான பார்வை எனக்கருதுகின்றேன்.

//ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து என்னைப்போன்ற ஒரு சிலரே அறிவர்//
இதன் பொருட்டே இளைஞர்கள் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் உண்டு. இவர்களை அன்பு செய்தால், அவர்களிடமிருந்து ஆக்க பூர்வமான பல விடயங்களை எங்கள் சமுகம் பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது எண்ணம்.

டி.சே!அருமையான ஒரு பதிவினைத் தந்தமைக்காகஉங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


10
Chandravathanaa says:
July 25th, 2006 at 2:03 am

இளங்கோ,

எப்போதுமே ஒரு கதை தன்னிலையில் இருந்து எழுதப் படும் போது கதைசொல்லியும் கதாசிரியரும் ஒருவரே என்ற பிரமை வாசகர்கள் மனதில் ஏற்பட்டு விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

நானே, சில சமூகப் பிரச்சனைகளை தன்னிலையில் நின்று எழுதியதால் அது என் வீட்டுப் பிரச்சனையோ என்ற கேள்விக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறேன். “இவ வீட்டில் இப்படித்தான்..” என்ற கேலிக்கும் ஆளாகியிருக்கிறேன். அப்போதெல்லாம் “இவர்கள் ஏன் இப்படிச் சிந்திக்கிறார்கள். இதை ஏன் ஒரு சமூகப் பிரச்சனையாகக் கருதுகிறார்கள் இல்லை” என்று வருந்தியிருக்கிறேன்.

ஆனால் இன்று நானே உங்கள் எழுத்தில் தடுமாறியிருக்கிறேன். நீங்கள் தன்னிலையில் நின்று எழுதியதால்.. அதுவும் உண்மை தழுவி எழுதியதால் கதைசொல்லியை நீங்களாகவே மனதுக்குள் வரித்துக் கொண்டு வாசித்து முடித்து எனது கருத்தையும் எழுதி விட்டேன்.

படர்க்கையில் ஒரு கதையை எழுதுவதையும் விட, தன்னிலையில் எழுதும் போது அந்தக் கதையின் வலு அதிகமாயிருப்பதையும் பல சமயங்களில் நான் கண்டிருக்கிறேன். உங்களது இந்தக் கதையும் தன்னிலையில் நின்று, நான் என்று எழுதப் பட்டதால் வாசிப்பவர்களிடம் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் மீது குற்றம் சொல்வதிலேயே குறியாயிருக்கும் பெரியவர்களில் பலர், புலம் பெயர்ந்ததால் கெட்டு விட்டார்கள் என்கின்ற வார்த்தைக் கோர்வையையும் மறக்காமல் அவ்வப்போது சொல்லிக் கொள்வார்கள். இன்றைய இளைஞர்களையும் விட அன்று புலம் பெயர்ந்த இளைஞர்களின் வாழ்வு மிகமிகக் கடினமானதாக இருந்தது என்பது பலருக்கும் தெரியாது. வா என்று வரவேற்க யாருமின்றிய நிலையில் புலத்தில் வாழ்வைத் தொடங்கியவர்கள் அவர்கள். அவர்களின் பிரச்சனைகள், ஏமாற்றங்கள், மனஉளைச்சல்கள்.. இவையெல்லாமே எமது சமூகத்தினரால் உணரப் பட வேண்டியவை. தொடரும் இளைய சமூகத்திடம் இப்படியான பாதிப்புக்கள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியதும் எமது சமூகத்தின் கடமையே.

இது குறித்த ஒரு நோக்காகவே உங்கள் பதிவை நான் பார்க்கிறேன். வெட்டினார்கள், கொத்தினார்கள் என்று பார்ப்பதை விடுத்து, அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள், என்ற சிந்தனையோடு, அண்டி உள்ளவர்கள் அவர்களை அணுகுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் பதிவான அதற்கான சிந்தனையை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

Thursday, July 20, 2006

கதைசொல்லியும் Gang fightsம்

By டிசே தமிழன்
Tuesday, June 13th, 2006 at 8:14 am

கதைசொல்லியும் Gang fightsம்


Chandravathanaa says:
July 20th, 2006 at 1:10 am


இதை மீண்டும் ஒரு முறையாய் இன்று வாசித்து முடித்தேன்.

இதை முதன்முதலில் கனடாவுக்கு வந்து 6கிழமைகள் நின்று திரும்பிய சில வருடங்களில் வாசித்த போது ஒவ்வொரு சம்பவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்க முடிந்தது. கனடாவில் எமது இளைய சமுதாயத்தின் நடைமுறைகளை நேரிலே கண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. திடீரெனக் கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் பயன் படுத்திய விதமும், திடீரென ஆக்கிரமித்த குடும்ப உறவுகள் இல்லாத தனிமையின் வெறுமையைப் போக்க அவர்கள் கூடிய விதங்களும் மிகவும் வருத்தத்துக்கு உரியவை.

இதை எழுதிய நீங்கள்தான் கதையின் கதாநாயகனாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி. இதை எழுதும் போது உங்கள் எழுத்தில் உங்களைப் புரிந்து கொண்ட தன்மை இருக்கிறது. இயலாமை உங்களை அறியாமலே உங்களை அழுத்தினாலும் அதனால் சில பல ஒவ்வாத செயற்பாடுகள் நடந்தாலும் உங்களிடம் மனிதம் இருந்திருக்கிறது.

அங்கு சுட்டவர்களும் வெட்டியவர்களும் மனிதமற்றவர்கள் என்றில்லை. ஏதோ ஓருவித விரக்தியும் தனிமையும் சேர்ந்து மனநிலை குழம்பியவர்கள் என்றே அவர்களைக் கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஒரு அன்பான உறவைச் சந்தித்து அன்பின் அணைப்பைப் பெறும் போது மாறியிருப்பார்கள். சாதாரண மனிதர்களாகியிருப்பார்கள். தமது தவறுக்கு நியாயம் தேடுபவர்களாய் இருந்தாலும் கூட உள்ளுக்குள்ளே கண்டிப்பாக வருந்தியிருப்பார்கள்.

இன்றைய நீங்கள் கூட அந்த வடுக்களுக்குள் அகப்பட்ட ஒருவனின் சாயலே தெரியாமலே இதுவரை எழுத்தால் எனக்கு அறிமுகமாகி இருந்தீர்கள். இத்தனை எழுத்து வன்மை உள்ள எத்தனை இளைஞர்களை புலம் பெயர்தல் புரட்டிப் போட்டிருக்கிறது என்ற உண்மையை உணர முடியும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை.

Chandravathanaa says: July 20th, 2006 at 1:10 am